ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு

M K Stalin Tamil nadu Cuddalore Kallakurichi Viluppuram
By Karthikraja Dec 03, 2024 08:30 AM GMT
Report

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதித்த மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல்

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்தது. 

fengal cyclone

புயல் கரையை கடந்தாலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

நிவாரணம்

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. 

இதனையடுத்து, ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

mk stalin

மேலும், பென்ஜால் புயலால் சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் முழுவதுமாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்கள்

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ.4,000, கோழி இறந்திருந்தால் தலா ரூ.100, எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹17,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், 33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட பல்லாண்டு பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹22,500 நிவாரணம் வழங்கப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கவும், பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.