நைட்டியுடன் கோவிலுக்குள் வந்த பெண் திமுக கவுன்சிலர் - வைரல் போட்டோஸ்
சேலத்தில் திமுக கவுன்சிலரால் கோவில் அர்ச்சகர் மிரட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதில் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் தனக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
கோயிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால் கவுன்சிலர் மஞ்சுளா அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். அப்போது அவர் நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் அர்ச்சகர் கண்ணன் அதிர்ச்சி அடைந்து கண்டித்துள்ளார்.. அதற்குதான் பெண் கவுன்சிலர் மஞ்சுளா அர்ச்சகரை ஒருமையில் திட்ட, இது தொடர்பாக கண்ணன், மஞ்சுளா மீது புகார் கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் கடந்த 23 வருடங்களாகவே சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். இதனிடையே 40வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறார். அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். இந்த வீடியோ மூலமாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உடனடியாக இந்த விஷயத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும்போது, திமுக கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..