முதலமைச்சர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலடி

Vijay M K Stalin
By Fathima May 10, 2026 07:56 AM GMT
Report

தமிழக முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப்பேச ஆரம்பிக்காதீங்கள், அதெல்லாம் இருக்கு. மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சித்திறமையும் தான் வேண்டும்.

ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சனைகளையும் மத்திய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சு தான் நாங்க எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு கஜானாவை துடைத்து விட்டு சென்றுள்ள கடந்த அரசு- என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே ...

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லேயே தெளிவா நாங்க சொல்லிவிட்டோம். அது உங்களுக்கு தெரியாதா?

அதுக்கு பிறகு தான் நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசை திருப்பாதீங்க! நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறறேன் என கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.

கூடிய விரைவில் மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன், வாக்களித்த மக்களோடு நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர வேண்டும் மீண்டும் எனது வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.