மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம் அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, முதலமைச்சர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
எந்தத் திட்டப்பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது.
இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்; அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன; முதலமைச்சர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!(1/4) @NHAI_Official
— Dr S RAMADOSS (@drramadoss) January 22, 2022
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.