கடனை திருப்பி செலுத்த 3 மாத தளர்வு வேண்டும்..!! மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!!
புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்.
மிக்ஜாங் புயல்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து தற்போது மீண்டு வந்து இயல்பு நிலையை கொஞ்சம் கொஞ்சமாக எட்டி வருகின்றது.
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையிலும், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில் இருந்து இன்னும் வெளிவர முடியாமல் பெரும்பாலான குடும்பங்கள் இன்று தவித்து வருகின்றது.
முக ஸ்டாலின் கடிதம்
கடன் வாங்கி தொழில் செய்து வரும் பலரும் தங்களின் வாழ்வாதாரம் கடும் இன்னலை சந்தித்துள்ளதால் வாங்கிய கடனுக்கான தவணையை மீண்டும் எவ்வாறு செலுத்துவது என்ற குழப்பத்தில் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை மத்திய நிதியமைச்சருக்கு எழுதியுள்ளார்.
அதில் ,மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வணிகர்கள்,வர்த்தகர்கள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பொருளாதார நிலைக்கு திரும்பவில்லை என குறிப்பிட்டு, தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்
“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திருமதி @nsitharaman அவர்களுக்கு மாண்புமிகு… pic.twitter.com/1U0BP62R5H
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 14, 2023
சிறு வணிகர்கள்,வர்த்தகர்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனைத் திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிள்ளார்.