முல்லை பெரியாறில் கேரளா அரசு கட்டும் அணை - முக ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
புதிய அணை கட்டும் கேரள அரசின் முன்மொழிவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுக்கக்கூடாது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே ரூ.1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தது.
இந்த சூழலில் தான், முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,
- முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
- உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கேரள அரசு, புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்கிறது.
-
கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஆட்சேபனை
போன்ற வலியுறுத்தல்கள் வைக்கப்பட்டுள்ளது.