அலட்சியமாக செயல்படும் மக்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வேதனை
கொரோனா குறித்து அரசு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் ரோபாடிக் கல்லீரல் அறுவைசிகிச்சை நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தளர்வுகளை அளித்தால் உடனே மக்கள் கூடி விதிகளை அலட்சியப்படுத்துவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும் இதுபோன்ற நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஏற்கனவே கொரோனா 3வது அலையை தடுக்க அடுத்த 3 மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.