“வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கட்டும்” - ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
MKStalin
Easter2022
politicianswish
By Swetha Subash
ஏசு பிரான் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.
“இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும் கிறித்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்கள். வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க அனைவரும் உறுதியேற்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.