இன்னும் தரமான சம்பவங்கள் நிறைய இருக்கு.. காத்திருந்து பாருங்க - மு.க.ஸ்டாலின் அதிரடி!

M K Stalin Tamil nadu Chennai
By Sumathi Aug 22, 2022 07:23 AM GMT
Report

சென்னையை வடிவமைப்பதில் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 சென்னை தினம்

இன்று 383வது சென்னை தினம். இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி.அதன்படி இன்று 383வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இன்னும் தரமான சம்பவங்கள் நிறைய இருக்கு.. காத்திருந்து பாருங்க - மு.க.ஸ்டாலின் அதிரடி! | Mk Stalin Wishes For Chennai Day

இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

 மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அங்கு தமிழ் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. வண்ண விளக்குகள், கேளிக்கை, விளையாட்டுகள் என அந்த பகுதியே திருவிழாக் கோலமாக காணப்பட்டது.

 

கனமழை பெய்த போதிலும் சென்னை தினம் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 383வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காத்திருங்கள்...

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.