6 பேர்விடுதலை : மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை

M K Stalin DMK
By Irumporai Nov 11, 2022 10:52 AM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

ஆறுபேர் விடுதலை 

முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேரறிவாளன்‌ இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும்‌ விடுதலை செய்து உச்சநீதிமன்றம்‌ வழங்கி இருக்கும்‌ தீர்ப்பை வரவேற்கிறேன்‌.

6 பேர்விடுதலை : மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை | Mk Stalin Welcome Release Of 6 Prisoners

பேரறிவாளன்‌ வழக்கின்‌ தீர்ப்பை அடிப்படையாகக்‌ கொண்டு நளினி. இரவிச்சந்திரன்‌. ராபர்ட்‌ பயாஸ்‌. சாந்தன்‌. முருகன்‌. ஜெயக்குமார்‌ ஆகிய ஆறுபேரையும்‌. விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

முதலமைச்சர் வரவேற்பு

மாநில அரசின்‌ அமைச்சரவை‌ தீர்மானத்தை ஆளுநர்‌ கிடப்பில்‌ போட்டு. வைத்திருந்தார்‌. அதற்கான அனுமதியை வழங்கத்‌ தொடர்ந்து அழுத்தம்‌ கொடுத்து வந்தோம்‌.

பேரறிவாளனைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது நாம் நடத்திய வலிமையான சட்டப்போராட்டங்களுக்கும், மனிதநேயத்துக்கும் கிடைத்த வெற்றி.

அரசின் முடிவுகளை நியமனப் பதவியில் இருப்போர் கிடப்பில் போடக்கூடாது என்ற வகையில் மக்களாட்சிக் கோட்பாட்டின் வெற்றி என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.