தவிக்கும் தென்மாவட்டங்கள் - மழை பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு..!!
தென்மாவட்டம் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்வர் முக ஸ்டாலின் இடங்களை நேரில் பார்வையிட்டார்.
மழை பாதிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. பெரும்பாலான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாத நிலையில், மக்களை மீட்கும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகின்றது.
உடமைகள் முதல் பல இடங்களில் உயிர் சேதமும் நடந்துள்ள நிலையில், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். பல தன்னார்வலர்களும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் நிலையில், இன்று முதல்வர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வினை மேற்கொண்டார்.
முதல்வர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வினை செய்த முதல்வர் முக ஸ்டாலின், மக்களுக்கு ஆறுதலை கூறினார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குறைகளை குறிப்பிட்டு அளித்த மனுக்களையும் முதல்வர் பெற்று கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வினை முடித்த பிறகு முதல்வர் முக ஸ்டாலின், நெல்லை மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.