கீழடி அகழாய்வு பணிகளை இன்று பார்வையிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வந்த நிலையில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.
இதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை இன்று முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார், இதற்காக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தன.
குறித்து ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு மதுரை வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் பயணியர் விடுதியில் தங்கியிருந்து, நாளை பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.