ஒரே நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின், விஜய் பங்கேற்பு

Vijay M K Stalin
By Yashini Feb 09, 2026 06:09 AM GMT
Report

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்தினரின் இல்லத்திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரமுகர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் கலந்து கொண்டது கவனம் ஈர்த்தது.

ஒரே நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின், விஜய் பங்கேற்பு | Mk Stalin Vijay At The Same Event Jaganmohan Reddy

திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் மணமக்களை நேரில் வாழ்த்தி, ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்தினருடன் நலம் விசாரித்தார்.

அதேபோல், நடிகர் விஜயும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி, மு.க. ஸ்டாலின் மற்றும் விஜய் ஒரே மேடையில் இருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் மற்றும் விஜய் ஒரே நிகழ்ச்சியில் தோன்றியதால், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.