சதிவலையில் முதல்வர் விஜய் சிக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Vijay M. K. Stalin Karnataka
By Karthikraja Jul 25, 2026 02:51 PM GMT
Report

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த செல்வதை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

காவேரி நீர் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடக செல்ல உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். 

சதிவலையில் முதல்வர் விஜய் சிக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | Mk Stalin Urge Vijay To Reconsider Karnataka Visit

முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் காவேரி விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர், காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சதிவலையில் முதல்வர் விஜய் சிக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | Mk Stalin Urge Vijay To Reconsider Karnataka Visit

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!

நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது திமுக!

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! 

பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.