திருமாவளவனை கைது செய்து.. காவல்துறையை கலைக்கணும் : ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

BJP H Raja
By Irumporai Dec 18, 2022 12:39 PM GMT
Report

தென்காசி நகர இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியனின் 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.

முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர்

அப்போது அவர் பேசும்போது, முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் மு.க.ஸ்டாலின். தேசபக்தி அமைப்பு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுங்கள், தேசத்துரோகி திருமாவளவன், சீமானை பிடித்து உள்ளே போடுங்கள் என உத்தரவிட்டிருந்தால் அவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியானவர் .

திருமாவளவனை கைது செய்து.. காவல்துறையை கலைக்கணும் : ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு | Mk Stalin Unfit For Cm Says H Raja

ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. திருமாவளவன் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்தால் ஸ்டாலினும் குற்றவாளிதான் என பேசினார்.

காவல்துறையினை கலைக்கணும்

மேலும், காவல்துறையை கலைத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளமாவது மிச்சமாகும். இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் தென்காசியில் நடந்த 4 கொலை குற்றவாளிகளை கைது செய்தால், தமிழ்நாடு டிஜிபி பற்றி விமர்சனம் செய்ததற்கு ஜனவரி 1-ம் தேதி நான் மன்னிப்பு கேட்பேன்.

அவர் சைக்கிளில் செல்லலாம், செல்ஃபி எடுக்கலாம் அதை போஸ்ட் போடலாம் அவ்வளவுதான் அவருக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்கிறார்கள் என கூறினார்.