ஒவ்வொரு குழந்தைக்கு இரண்டு தாய் .. அதில் முதல்வரும் ஒரு தாய் : அமைச்சர் அன்பில் மகேஷ்
ஒவ்வொரு குழந்தைக்கும் உணவளித்து புது ஜகத்தினை உருவாக்குவோம் என்று செய்துகாட்டுபவர் MK ஸ்டாலின் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் MK பாரதி….மகாகவி பாரதி… ஒவ்வொரு குழந்தைக்கும் உணவளித்து புது ஜகத்தினை உருவாக்குவோம் என்று செய்துகாட்டுபவர் MK ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.

ஒவ்வொரு குழந்தைக்கு இரண்டு தாய்
மேலும் அவர் கூறுகையில், மகளீருக்கு இலவச பேருந்து திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த பேருந்துகளில் வேலைக்கு பயணிக்கும் பெற்றோர் குழந்தைக்கு உணவு செய்து வைத்துவிட்டு வரவில்லையே என பலர் வேதனை படுவதுண்டு.
அந்த வேதனையை போக்கும் வண்ணம் தமிழக முதல்வர் தற்போது மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தைக்கு இரண்டு தாய். ஒரு பேருந்தில் பயணிக்கும் தாய், மற்றோரு தாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.