1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் - அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Amit Shah M K Stalin DMK BJP
By Jiyath Aug 06, 2023 02:13 AM GMT
Report

உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் 38வது கூட்டத்துக்கு நேற்று தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் "இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எதுவுமின்றி இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

அந்த அறிக்கையில் 'எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும்.

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் - அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! | Mk Stalin Twitter Post Againts Amit Sha

இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல. தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!