தமிழகத்தில் பணவீக்கம் குறைவு மகிழ்ச்சியளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தமிழகத்தில் பணவீக்கம் 5.37% ஆக குறைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,
இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. (1/3)https://t.co/ZNMakSB4r8
— M.K.Stalin (@mkstalin) May 19, 2022
பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்றும் 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இச்சாதனை தொடரும் என தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலைவாசி குறைவு, பேருந்தில் மகளிருக்கு இலவசம் பேன்றவற்றால் தமிழகத்தில் பணவீக்கம் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.