நமது சகோதர மாநிலத்திற்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

M K Stalin Kerala Pinarayi Vijayan Chief Minister of Tamil Nadu
By Karthick Jul 30, 2024 05:20 AM GMT
Report

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெறும் பாதிப்புகளை உண்டாகியுள்ளது. சுமார் 20'க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 100'க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என கருதப்படும் சூழலில், மீட்புப்பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான் கேரளா நிலச்சரிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kerala Wayanad Landslide

ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவின் தமிழாக்கம் வருமாறு,

#வயநாட்டில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!

கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!

இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலத்திற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.

Kerala Wayanad Landslide

முன்னதாக மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளார்கள்.