மூன்றே ஆண்டுகளில்...நாலு கால் பாய்ச்சல்! இதுவே சாட்சி - முதலமைச்சர் பூரிப்பு

M K Stalin Government of Tamil Nadu DMK
By Karthick May 31, 2024 08:11 AM GMT
Report

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,

மு.க.ஸ்டாலின் அறிக்கை

அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

mk stalin tweet about education growth tamilnadu

20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'Smart' வகுப்பறைகள்,
புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

முன்னிலை வகிக்கிறது

பெண் கல்வியில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம்

தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களால் உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது எனவும் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் 34% உயர்ந்திருக்கிறது எனவும் மாநில அரசு தெரிவித்திருப்பது.

தோல்வி பயத்தில்...வன்மத்தை கக்குகிறார்கள் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தோல்வி பயத்தில்...வன்மத்தை கக்குகிறார்கள் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


இளம் தலைமுறையினரின் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் குறைந்தது. உயர் கல்வி பயில இயலாத மாணவியர் திருமணம் செய்விக்கப்பட்டது போன்ற அவலங்களுக்கு முடிவுகட்டும் வகையில், ஒரு புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு 2022இல் அறிவித்தது.

அதுவரை பெண்களின் திருமணத்துக்காகச் செயல்படுத்தப்பட்டுவந்த நிதியுதவித் திட்டத்தை, 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டமாக (புதுமைப் பெண் திட்டம்) மாற்றி அறிவித்தது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர் கல்விக்காக மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தும் திட்டத்தை செப்டம்பர் 2022 முதல் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

இரண்டு மடங்கு

அந்தத் திட்டத்தின்கீழ் 2.73 லட்சம் மாணவியர் பயன்பெற்றுவருவதாக அரசு அண்மையில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அவர்களைத்தயார்செய்யும் வகையிலும் 'நான் முதல்வன்' என்னும் வழிகாட்டித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் மாணவர்கள் பயைைடந்துள்ளதோடு, தொழில் வழிகாட்டி மூலம் 1.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இளம் தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பெண்களின் உயர் கல்விக்காகவும் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களால் உயர் கல்வியில் சேரும் மாணவர் விகிதம் 19% ஆக உயர்ந்திருக்கிறது.

mk stalin tweet about education growth tamilnadu

இது நாட்டின் தேசிய சராசரி சேர்க்கை விகிதத்தைப் போல் இரண்டு மடங்கு. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் எனக் கல்வித் துறையில் தமிழ்நாடு தனியிடம் வகிக்க இதுபோன்ற திட்டங்கள் முக்கியக் காரணம், பெண்களின் உயர் சுல்வி விதேம் அதிகரித்திருப்பதால் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்து, அவர்களின் சமூகப் பொருளாதாரப் பங்களிப்பும் உயதும்.

அரசின் நலத் திட்டங்கள்

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் உயர் கல்வி பெறும்போது கல்வித் துறையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சாத்தியத்தை அது ஏற்படுத்தும், 'புதுமைப் பென் திட்டத்தால் வீட்டில் உள்ள அனைத்துப் பெண் குழந்தைகளும் பயன்பெறலாம் என்பதும் பிற கல்வி ஊக்கத் தொகைத் திட்டங்களைப் பெற இது தடையாக இருக்காது என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

mk stalin tweet about education growth tamilnadu

அனைத்துக் தரப்பையும் உள்ளடக்கியதாகத் திட்டம் பரவலாக்கப்படும்போது, அது ஏற்படுத்தும் மாற்றமாகத்தான் பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை விகிதத்தைப் பார்க்க வேண்டும். முதியோர் உதவித்தொகை. ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்கள் சிலவற்றில் இடைநிறுத்தம், பயனைப் பெறுவதில் குளறுபடி பயனாளிகள் விடுபடல் போன்றவை பலரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள் நலத் திட்பங்கள் அனைத்தும் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும்போதுதான் அவை தொடங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும், "புதுமைப் பெண்', 'நான் முதல்வன்" போன்ற திட்டங்களில் அந்த நம்பிக்கையை இளம் தலைமுறையினருக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்