சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK TN Assembly
By Karthikraja Sep 19, 2026 02:10 PM GMT
Report

 சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக  மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக முப்பெரும் விழா

அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் வருவதால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி நடத்த நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின் | Mk Stalin Thanks To Kolathur Voters For Loss

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது, முரசொலி செல்வம் விருது ஆகிய 7 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

திமுக பார்க்காத வெற்றி, தோல்வி இல்லை

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "அறிவியக்கமான திராவிட முன்னேற்ற கழகம் உதயமான நாள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. 

சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின் | Mk Stalin Thanks To Kolathur Voters For Loss

கடந்த 15ஆம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழாவின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் இன்னும் சிறிது காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால், மனசு கேட்கவில்லை.

தந்தை பெரியார் பிறந்தநாளில் கலந்துகொண்டு, இன்று முப்பெரும் விழாவிலும் கலந்துகொண்டுள்ளோம். 75 ஆண்டுகள் ஒரு இயக்கம் நிலைத்து நிற்பது சாதாரணமானது அல்ல. அதே கம்பீரத்துடன் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனை கழக உடன்பிறப்புகளால்தான் நடந்தது.

அவர்களால்தான் நான் வாழ்கிறேன். அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். என்னைத் தலைவராக்கிய உடன்பிறப்புகள்தான் முதலமைச்சர் பொறுப்புவரை உயர்த்தி அழகு பார்த்தார்கள். அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எனது நன்றிகள்.

திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. வெறும் 17 லட்சம் வாக்குகளில் தான் நாம் தோற்றுள்ளோம். தேர்தலில் இன்னும் கணித்து பணியாற்றியிருந்தால் தோல்வியே இருந்திருக்காது.

பெரும்பான்மையே இல்லாத தவெக அரசு, ஏதோ பெரிய அலை அடித்தது போலவும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காக காத்திருந்தது போலவும் இமெஜ் பில்டப் செய்கிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று தவெகவிற்கு ஆதரவு தந்த கட்சிகளையும் குதிரை பேரம் நடத்தி இழுத்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை நிறுத்துவது, பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தவெக ஆட்சியின் வேலையாக இருக்கிறது.

தினமும் சூட்டிங் மோடில்தான் இருக்கிறார் முதலமைச்சர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது கேமராமேன் யார் என்று சொல்லாமல் மக்கள் முன்பு நடித்து வருகிறார்.

கொளத்தூர் மக்களுக்கு நன்றி

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ‘பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு, இந்தியாவில் இல்லாத பல திட்டங்கள்’ என பேசப்பட்ட தமிழ்நாட்டில், 

சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின் | Mk Stalin Thanks To Kolathur Voters For Loss

இன்று முதலமைச்சர் ‘கோட்-சூட்டு போட்டாரு, கையால் சாப்பிட்டாரு, காலால் நடந்தாரு, இந்த சைகை செஞ்சாரு’ என்பதுதான் செய்தியாக வருகிறது. இதையெல்லாம் பார்க்க அருவருப்பாக இருக்கிறது.

முதலில் பஞ்ச் டயலாக், இப்போது வெளிநாட்டு சுற்றுலா. முதலமைச்சரைப் பொறுத்தவரை எல்லாமே ரீல்ஸ்தான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கி, தமிழ்நாட்டை 25 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள்.

ரீல்ஸ் வெடி வெடித்த ஆளுங்கட்சியினரால், நூற்றாண்டு கால புகழ்பெற்ற சட்டமன்றம் தனது மாண்பை இழந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும்போது, கொளத்தூர் மக்களே, கோடானகோடி நன்றி.

முதலமைச்சரின் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை என ஸ்க்ரீன் வைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். இதுதான் நாட்டுக்கு தேவையா?

மிசா பற்றி பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை.

எனது மிசா வரலாற்றை அண்ணன் சிட்டிபாபு சிறையிலேயே பதிவு செய்திருக்கிறார். இது காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டாகும்." என பேசியுள்ளார்.