”ஜனநாயகம் காப்போம்!” - வாழ்த்து சொன்ன ஈ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் சொன்ன பதில் என்ன?

Tamil Nadu CM Stalin Edappadi Palanisamy
By mohanelango May 03, 2021 05:44 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

அதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!”