வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்படும் - முதல்வர் ஸ்டாலின்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 %இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்தும்வகையில் அரசு செயல்பட வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு பதவி ஏற்றதில் இருந்து கோரோனா தொற்றை குறைப்பதில் முழுவீச்சில் செயல்பட்டு, தற்போதுதான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து ஓரளவு மூச்சு விட்டு கொண்டு இருப்பதாக கூறினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.