ஏ.ஆர். ரகுமான் நிகழ்ச்சி..போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து முதல்வரின் வாகனம்
நேற்று நடைபெற்ற இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதல்வரின் வாகனமும் சிக்கியது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை மின்னஞ்சலுக்கு தங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும் என குறிப்பிட்டு விரைவில் அது குறித்து குழு பதிலளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் பலரும் X தளத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தனது ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிக்கித்தவித்த முதல்வரின் வாகனம்
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்தும் இசைநிகழ்ச்சிக்கு கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இருப்பினும் அத்தினம் மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்றைய தினம் நடத்தப்பட்டது.
அதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 ரூபாய் முதல் 15 ஆயிர ரூபாய் வரை பணம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டது கூறப்படுகிறது. இருப்பினும் பார்க்கிங் வசதி முதல் இருக்கை வசதி என எதுவும் சரிவர மேற்கொள்ளப்படாத நிலையிலும், அதிகப்படியான கூட்டநெரிசல் காரணமாகவும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பலரும் நிகழ்ச்சியை காணமுடியாமல் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சி காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நிலையில், பல மக்களும் அவதிப்பட்டனர். இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் வாகனமும் சிக்கியது தொடர்பான வீடியோக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.