பட்டம் வாங்குனவங்களே..இத பண்ணுங்க..!! முதல்வர் வைத்த வேண்டுகோள்..!
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
பட்டமளிப்பு விழா
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாட்டின் பிரதமர் மோடி, மாநிலத்தின் முதல்வர் முக ஸ்டாலின், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினர்.
விழா மேடையில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
மாணவர்களுக்கு வேண்டுகோள்
இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்த அவர், திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கியவர் பாரதிதாசன் என்று சுட்டிகாட்டினார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்களும்,புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
மேலும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக கூறிய அவர், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேருங்கள் என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.