ஒரு சொல் வெல்லும் .. ஒரு சொல் கொல்லும்.. வார்த்தை ரொம்ப முக்கியம் : முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தலைவராக முதலமைச்சர்
இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த வாய்ப்பை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், என்றும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
#LIVE: கழகப் பொதுக்குழுவில் உரை https://t.co/PMCaGV09eR
— M.K.Stalin (@mkstalin) October 9, 2022
அனைவரும் கழகத்தை முன்னோக்கி இழுத்து செல்ல வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. சட்டமன்ற தேர்தலில் வென்று விட்டோம், ஆட்சி பொறுப்பிற்கு வந்துவிட்டோம் என மெத்தனமாக இருக்க முடியாது.
தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது
பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும். இனி தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நம்மை விட நாட்டு மக்கள் அதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாத காரணத்தால் நம்மை பற்றி அவதூறு மூலமாக அரசியல் நடத்த பார்க்கிறது பாஜக. அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போது இணைக்காத மக்கள் தமிழக மக்கள் என்பதால் திணறி கொண்டு இருக்கிறது பாஜக என தெரிவித்துள்ளார்
மேலும், நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் முக்கியமானவை என்றும் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்' எனவும் பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.