மாநிலத்தில் சுயாட்சி: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் முதல் பகுதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து உரையாற்றும் போது, மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது திமுக.
நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.

அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும், மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
இன்னும் எத்தனை நாள்கள்தான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படை. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என பேசியுள்ளார்.
அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil