காவல் நிலையங்களில் ரூ.10 கோடி செலவில் சிறப்பு வசதிகள் - மு.க.ஸ்டாலின் உத்தரவு!
காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு
காவல் நிலையங்களில் 10 கோடி ரூபாயில் சிறப்பு வசதிகளை செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்ததுள்ளார். காவலர் - மக்கள் உறவை மேம்படுத்த காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களில் ரூ.4 லட்சம் செலவில் வசதிகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வசதிகள்
பொதுமக்களின் வசதிக்காக வரவேற்பறை,கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகிய வசதிகள் செய்துதரப்படும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் காவல் நிலையங்களில் நவீனமயமாக்கப்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள்,பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த திட்டம் காவல் நிலையங்களில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.