ராகுல் காந்தியிடம் போனில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin Rahul Gandhi
By Fathima Apr 16, 2026 01:20 PM GMT
Report

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறை உட்பட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்தனர்.

ராகுல் காந்தியிடம் போனில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் | Mk Stalin Speaks With Rahul Gandhi

காலையில் கருப்பு கொடி ஏற்றி முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பை தெரிவித்தார், இந்நிலையில் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக எம்.பி-க்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என்றும்,

தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க திமுக எம்.பி-க்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என கூறியுள்ளாராம்.