தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
mk stalin slams for powercut in ministers event: அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்வில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர்களின் நிகழ்வில் மின்வெட்டு
மதுரையில் நடைபெற்ற மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிகழ்வில் உரையாற்றும் போது மின்தடை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக்கு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், "நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஜெனரேட்டரில் இயங்கிக்கொண்டிருந்தது.
The function premises was operated in generator due to power switch over from one generator to other generator due to which there was a power cut for 5 seconds. https://t.co/mO46UxFz4c
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 26, 2026
ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டதன் காரணமாக 5 வினாடிகளுக்கு மின்வெட்டு ஏற்பட்டது" என தெரிவித்துள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்களின் சந்திப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மதுராந்தக பூத் முகவர்கள் கூட்டத்திலும் மின்தடை ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
— M.K.Stalin (@mkstalin) September 26, 2026
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.#மின்வெட்டு #PowerCut pic.twitter.com/ooqfb57Ad0
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல" என குறிப்பிட்டுள்ளார்.