ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கும் தவெக அரசு - மு.க.ஸ்டாலின்

M K Stalin Fishing Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 21, 2026 06:47 AM GMT
Report

mk stalin slams tvk govt to destroy fishers Habitat: தவெக அரசு, ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்க துடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மீனவர்கள் தின வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மீனவர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கும் தவெக அரசு - மு.க.ஸ்டாலின் | Mk Stalin Slam Tvk Govt To Destroy Fishers Habitat

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!

தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.

அத்தகைய மீனவ மக்களுக்காக நமது DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது.

திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.

மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!

அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.