’முதலமைச்சர், முதல் கையெழுத்து’ - மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ள ஐந்து முக்கிய திட்டங்கள்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்று தலைமை செயலகம் வந்தடைந்தார். ஸ்டாலின் உடன் அமைச்சரவையில் இடம்பெறும் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற உடன் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக பல முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவை

- கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டை உள்ள குடும்பத்துக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டார். அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் மே மாதமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசே மருத்துவ கட்டணத்தை ஏற்கும்.
- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். இது மே 16 முதல் அமலுக்கு வரும்
- சாதாரண கட்டண மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம். இது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
- மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளார்.