தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுகிறார் - சிவசேனா பாராட்டு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுவதாக சிவசேனா பாராட்டி உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள பதாகையை முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் விடுபட்டது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் முன்னாள் பிரதமர் நேரு, அப்துல் கலாம் ஆசாத் ஆகியோர் படங்கள் இடம்பெறாமல் பதாகை வெளியிட்டு இருப்பது ஒன்றிய அரசின் குறுகிய புத்தியையும் பழிவாங்கும் செயலையும் குறிப்பாக கடுமையாக சாடி உள்ளார்.
தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க ஏற்கனவே தயாராக இருந்த புத்தக பைகளில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் படங்களை அகற்றாமல் அப்படியே கொடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதை சஞ்சய் ராவத் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுவதாக கூறியுள்ள அவர், ஆனால் நேருவை இந்த அளவுக்கு வெறுப்பதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் வலியுறுத்தி உள்ளார்.