வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் - முதல்வர் ஸ்டாலின்
வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்திற்கு அரசுமுறை பயணம் செய்தார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜெர்மனி புறப்பட்ட அவர், அங்கு பல்வேறு நிறுவன முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதன் மூலம், தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்தது.
ஜெர்மனி பயணம் முடிந்த பின்னர், இங்கிலாந்து புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
ரூ.15,516 கோடி முதலீடுகள்
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்தை தளமாக கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாடு மின்சார வாகன துறையில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், 1000 த்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், ஆஸ்டிராஜெனீகாவின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முன்னர் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களின் வழியாக ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன.
Electrifying news from #London!
— M.K.Stalin (@mkstalin) September 6, 2025
UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating 1,000+ jobs.
With AstraZeneca’s expansion and earlier MoUs, the UK & Germany leg of #TNRising has secured Rs. 15,516 Cr investments,… pic.twitter.com/AprScf5XMs
இதன் மூலம் 17,613 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவை வெறும் எண்கள் அல்ல. இவை வாய்ப்புகள், எதிர்காலங்கள் மற்றும் கனவுகள்.
இதில் ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.7020 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம், 15,320 வேலைவாய்ப்புகள்கள் உருவாக்கப்படும்.
இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.8,496 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம், 2,293 வேலைவாய்ப்புகள்கள் உருவாக்கப்படும். " என தெரிவித்துள்ளார்.