விரைவில் திமுக ஆட்சி உதயமாக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேச்சு

M K Stalin DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 16, 2026 06:43 AM GMT
Report

mk stalin says soon dmk will form govt: விரைவில் திமுக ஆட்சி உதயமாக உள்ளதாக கே.என்.நேருவின் இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

விரைவில் திமுக ஆட்சி

சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திருமணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். 

விரைவில் திமுக ஆட்சி உதயமாக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேச்சு | Mk Stalin Says Soon Dmk Will Form Govt

இதில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 6 மாத காலமாக ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆட்சி என்று சொல்லக்கூடாது. காட்சியாகதான் நடந்து கொண்டிருக்கிறது.

மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள், ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. திரையிலே கதாநாயகனாக நடித்து நிஜத்திலே வில்லனாக உலாவி கொண்டிருப்பவர் தான் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

பெண்கள் அதிகளவில் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் இந்தஆட்சியில். அதை செய்பவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

மனு கொடுக்க வந்தவரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதற்கு முதல்வர் வாய் திறக்கவில்லை.

இதெற்கெல்லாம் முடிவு கட்ட நல்ல சூழல் அமைய உள்ளது. விரைவில் நமது ஆட்சி உதயமாக உள்ளது. தற்போதும் நீங்கள் தான் முதலமைச்சர் என சிலர் கூறுகிறார்கள். தயவுசெய்து அப்படி கூறாதீர்கள். தற்போது மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது" என பேசியுள்ளார்.