திட்டம் தொடரும் வரை தமிழகத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆளுவான்..முதல்வர் பெருமிதம்...!!
அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
முதல்வர் உரை
திமுக அரசின் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்படும் மகளிர் உரிமை திட்டத்தை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்து பெண்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்ணா சமூகத்திலிருந்து சுடர் ஏந்தி வந்திருப்பதாக கூறி, அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தால் தான், தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்த கூடிய மகளிர் உரிமை தொகை திட்டத்தை இன்று துவங்கி வைப்பதில் தனக்கு கிடைத்த மிக பெரிய பேராக பார்ப்பதாக கூறினார்.
தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைத்து, அந்த பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆள்கிறான் என கூறியதை போல, இந்த திட்டம் தொடரும் வரை தமிழகத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆளுவான் என பெருமிதம் கூறினார். தொடர்ந்து திமுக அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் முக ஸ்டாலின், இவை அனைத்தும் இருந்தாலும் காலத்திற்கும் தான் எண்ணி பெருமைப்படுகிற திட்டமாக இது விளங்கும் என்றும் கூறினார்.
சொன்னதை செய்வான் ஸ்டாலின்
நாள்தோறும் உதைக்கும் உதயசூரியன் போல, இந்த உதயசூரியனின் திட்டமும் மக்களுக்கு நன்மையை தர போகிறது என்று கூறிய முதல்வர் முக ஸ்டாலின், ஆட்சி வந்தவுடன் நிதிநிலைமை சரியில்லாத காரணத்தால் தாமதமானது என கூறினார்.பலர் குற்றம்கூறிய நிலையில், சொன்னதை செய்வான் கலைஞரின் மகன் என பெருமிதம் தெரிவித்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், தான் போட்ட ஒரு கையெழுத்து பலரின் வாழ்க்கையை மாற்றியதற்கு காரணமே மக்கள் தான் என நன்றி தெரிவித்துக்கொண்டார்.
.
பெண்களை முடக்கிவைத்த நிலையில், இதில் அடித்தட்டு வகுப்பை சார்ந்த பெண்களை மட்டுமின்று உயர்வகுப்பு சேர்ந்த பெண்களை இந்த இன்னல்களை சந்தித்தனர் என குற்றம்சாட்டிய முதல்வர் முக ஸ்டாலின், ஆனால் தற்போது அந்த கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல் என கூறி, குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் பிற்போக்குவாதிகள் இன்றும் இருக்கின்றனர் என கூறினார். மேலும், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் சிலருக்கு திராவிட ஆட்சி மீது கோபம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மாதம் 1000 ரூபாய் பணத்தை சேமிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு பெண்களும் தங்களது நன்றியை தமிழக அரசிற்கு தெரிவித்து கொண்டனர்.