தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மினசாரத்தில் தடங்கல் உள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மின்கட்டண பிரச்சினை
திமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" என குறிப்பிட்டுள்ளது.
இதனை பகிர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.

3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
— M.K.Stalin (@mkstalin) July 31, 2026
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… https://t.co/6FubNiIFPa
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
சி.டி.ஆர் நிர்மல்குமார் விளக்கம்
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறு.

சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் ஆதாரமற்ற தகவல்களை வைத்து மக்களை அவர் குழப்பக் கூடாது.மின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின்கட்டணமும் அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை IBC Tamil
ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்! IBC Tamil