திராவிடம்தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Tamil nadu DMK Tamil Viluppuram
By Karthikraja Jan 28, 2025 10:30 AM GMT
Report

 திராவிடம்தான் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்றுத்தந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மணிமண்டபம் திறப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. 

mk stalin

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

20 சதவீத இட ஒதுக்கீடு

இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "திராவிட இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவராக கோவிந்தசாமி இருந்துள்ளார். என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 

mkstalin latest speech

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்தான் திமுக. இந்த திமுக அரசு தான் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றது. 

21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சி

திராவிடம் தான் நம் தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம் தான் நம் அன்னை தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்றுத்தந்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான். திராவிடமே நவீன தமிழகத்தை உருவாக்கியது. இதனால்தான் நமது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்கிறேன். 

mkstalin latest speech

நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு. என்னை முன்னிலைப்படுத்த நான் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தை முன்னிலைப்படுத்தவே உழைக்கிறேன். இது ஸ்டாலின் ஆட்சி எனச்சொல்லி பெருமை தேடிக்கொள்ள விரும்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பதையே நான் கூறுகிறேன். திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்திகள் இங்கு தலைதூக்க முடிவதில்லை.

நமக்கு நிதி ஒன்றுதான் தடையாக உள்ளது. வேற எந்த தடையும் இல்லை. நிதி இல்லை என்று புலம்பி கொண்டு இருக்காமல், மக்களின் குறைகளை நீக்கும் அரசாக திமுக இருக்கிறது. சில எதிர்க்கட்சி தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை அல்ல, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டு இருக்கும் குறைபாடு" என பேசினார்.