இங்கே பாஜக தான் ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாத்தியிருக்காங்க - முதல்வர் தாக்கு!
தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் பேசிய அவர், பெண்கள் ஓதுவார்களாக, அர்ச்சகர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் ஆகும் அளவிற்கு தமிழகத்தில் முற்போக்கு நிலை காணப்படுகிறது.
தனிமனிதர்கள் தொடங்கி மாநிலங்களின் அனைத்து உரிமைகளுக்காக போராட வைத்துள்ளார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர். முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை.
40-க்கு 40
மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார். பாஜகவிடம் இருந்து அதிமுக பிரிந்துவிட்டதாக பழனிசாமி நாடமாடுகிறார். பாஜக வெற்றி பெற்றால் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, பாஜகவை ஆதரிக்கமாட்டோம் என எங்காவது கூறியிருக்கிறாரா?

பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார். அதிமுகவுக்கு போடும் வாக்கு என்பது பாஜகவுக்கு போடும் வாக்கு தான். இந்தியா முழுதும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. ஜூன் 4-ம் தேதி தமிழகத்தில் 40-க்கு 40 என மக்கள் வழங்க இருக்கிறார்கள். எனவே திமுகவுக்கு வாக்களித்து வேட்பார்களை வெற்றி பெற செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil