உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்... மே தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

M K Stalin Tamil nadu DMK Election
By Vinoja May 01, 2026 08:22 AM GMT
Report

நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற மே 4 ஆம் திகதி பெறவிருக்கிறோம். அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை என முதல் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.

உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்... மே தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! | Mk Stalin Said Dmk Victory Assured On May 4

மே தின நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில், “நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற மே 4 ஆம் தேதி பெறவிருக்கிறோம்.

அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை. திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும். இதை நான் கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை.களத்தை பார்த்ததால் கூறுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும்.

உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.