எட்டப்பர்களாக அல்ல.. கட்டபொம்மன்களாக! திமுக தலைவர் ஸ்டாலின் பதில் வைரல்
congress leader in chennai to meet mk stalin: தொகுதி மறுவரையறை மசோதாவை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே சென்னை வந்துள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என நேற்று அறிக்கை வெளியானது.
இந்த முடிவை கைவிடுமாறு திமுக தலைவர் முக ஸ்டாலினை வலியுறுத்துவதற்காக இண்டியா கூட்டணி தலைவர்கள் சென்னை வரமுடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை சந்திப்பு நடைபெறவுள்ள சூழலில் ராகுல்காந்தி எக்ஸ் பதிவில், இண்டியா கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நானும் முக ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம்.
தொகுதி மறுவரையறை அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுக-வையும் கேட்டுக்கொள்கிறேன்.
தொகுதி விரிவாக்கத்தை 850 இடங்களாக அதிகரிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவரும்.
சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார்.
தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும் அரசியலமைப்பு பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
முக ஸ்டாலின் பதிவு
இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்று பங்களிப்பை அங்கீகரித்தமைக்காக சகோதரர் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டின் நலன்களையும் நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாக கருதியே ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம், இதிலிருந்து ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள்! மொட்டுக்கட்சிக்கு பதிலடி கொடுத்த விஜேபால IBC Tamil