வாட்ஸ்அப்பில் வரும் வரலாற்றை படித்து விட்டு நிர்மலா சீதாராமன் பேசியிருப்பார் - மு.க.ஸ்டாலின் பதிலடி!
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பேச்சு
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில் 'பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையில் அவரது சேலையை இழுத்த கட்சி திமுக. மீண்டும் இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்து, அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அவைக்கு வந்தார்.ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் பதிலடி
இந்நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாட்ஸ்அப்பில் பரவும் வரலாறுகளை படித்துவிட்டு அவ்வாறு பேசியிருக்கலாம்.
சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது ஜெயலலிதாவாக நடத்திக்கொண்ட நாடகம் என்பது அப்போது அவையிலிருந்த அவனைவரும் அறிவார்கள். அப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்தடன் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார். அப்போது நான் உடனிருந்தேன் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) அவர்கள் சட்டமன்றத்தில் பேசி அதுவும் அவை குறிப்பில் உள்ளது.
எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வை பொய்யாக திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையை தவறாக வழிநடத்துவது என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.