உலக தரத்தில் 'கலைஞர் பன்னாட்டு அரங்கம்' அமைக்கப்படும் - ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கைக்கு மு.க. ஸ்டாலின் பதில்!

A R Rahman M K Stalin Tamil nadu
By Jiyath Aug 13, 2023 05:46 AM GMT
Report

ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கை

இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள பனையூரில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் கூட ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து இருந்தனர்.

உலக தரத்தில்

இந்நிலையில் சென்னையில் திடீரென மழை பொய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்காக ட்விட்டரில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் வேறு தேதியில் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் 'அரசின் உதவியுடன் கலை, மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களுக்கான அடுத்த கட்ட உள்கட்டமைப்பை சென்னையில் உருவாக்குவோம் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

முதலமைச்சர் பதில்

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'சென்னையின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரிய இசை கச்சேரிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் உலக தரத்தில் அமையவுள்ளது.

ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் உள்ளிட்டவற்றுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னை நகரத்தின் புதிய கலாச்சார அடையாளமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னையில் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.