நிவாரணம் வழங்குவதில் தாமதம் இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin Delay Heavy Rain Relief Discuss
By Thahir Oct 17, 2021 10:03 AM GMT
Report

கனமழையால் பாதிக்கபட்டோருக்கு நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது பெய்து வரக்கூடிய கனமழை தொடர்பாகவும்,

நிவாரணம் வழங்குவதில் தாமதம் இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mk Stalin Relief Delay Heavy Rain Discuss

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்பின் பேசிய முதல்வர், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

கனமழை பெய்து வரும் நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியில் 10 நிவாரண முகாம்களில் 337 பேர் தங்க வைக்கப்பட்டு, உணவு பொருட்கள் தரப்பட்டுள்ளன என்றும் நெல்லை திருகுருங்குடி மலையில் கோயிலுக்கு சென்ற 500 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மழைக்காலத்தில் தோற்று வியாதிகள் மற்றும் டெங்கு பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.