ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
முதியோர் உதவித்தொகை ரூ1,500 ல் இருந்து 2000 ஆக உயர்த்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும்.
வருமான வரி செலுத்தாத குடும்ப மகளிருக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் மூலம் பிரிட்ஜ், மிக்சி, வாஷிங்மெசின், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்.
5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கு செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
BC, MBC பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
ஊரகப்பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.
மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்.