திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது சீர் செய்யும் : முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

M K Stalin
By Irumporai Jun 03, 2022 03:55 PM GMT
Report

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்  அமைச்சர் முக ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார் . அதன்பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது ; திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலைநிமிர தொடங்கி விட்டது.பேச்சு, கவிதைக்கு தற்போது மரியாதை உயர்ந்துள்ளது; இந்த போட்டிகளை பார்த்தபோது, எனது கல்லூரி கால நினைவுக்கு சென்று விட்டேன்

மொழி, இனத்துக்காக உயிரை விடும் சூழல் வந்தால் அந்த தியாகத்தை செய்ய நான் தயார் என்று கூறினார் மேலும், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைப்பதற்காக அல்ல, இந்த பேச்சாற்றலை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை குறிப்பிட்டு சொல்கிறேன்.

பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்காது. எல்லாவற்றிலும் வென்றவர்கள் கூட மேடைகளில் தோற்றுவிடுவார்கள். மேடைகளை ஆட்சி செய்வது என்பதும், கோட்டையை ஆட்சி செய்வதைப் போல அவ்வளவு கடினமானது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர்

திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும் திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும் திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும் திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது.

இந்த திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது. இந்த தத்துவத்தை பயிற்றுவிக்கும் பாசறையாகவே மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம் திகழ்வதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்துத் துறைகளும் இது போன்று மாணவச் செல்வங்களுக்கு பேச்சுப் பயிற்சி தருமானால் தமிழ்நாட்டுக்கு ஏராளமான பேச்சாளர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே வெற்றி பெற்று இருக்கக்கூடிய அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியிருக்கக்கூடிய சிறுபான்மை ஆணையத்திற்கு என்னுடைய நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்