பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூல் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்!
பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த மோடியை ஆளுநர், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும் பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி வரவேற்றனர்.
Tamil Nadu | Prime Minister Narendra Modi holds a roadshow after arriving in Chennai. pic.twitter.com/FCK896whEU
— ANI (@ANI) May 26, 2022
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் மோடி. சென்னை வந்தடைந்தார்விமான நிலையத்தி பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர்.
ரெயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார்.

சென்னை ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.