உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - முக ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்களுடன் வெல்வோம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(மார்ச் 16) நடைபெற்றது.
அதில், தேர்தல் பிரசாரம், பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் முக ஸ்டாலின்.

தனது எக்ஸ் பக்கத்தில்,
"உழைப்பை அள்ளிக்கொடுங்கள்!
உதயசூரியன் உதிக்கட்டும்!
வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள்!
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க. ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும்
- நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்!
திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!"
என்று பதிவிட்டுள்ளார்.
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 16, 2026
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான்… pic.twitter.com/5lpTdNenrL