முதலமைச்சர் அமர்ந்திருக்கும் பைக்கின்(Bike) விலை என்ன தெரியுமா?
தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, விலையுயர்ந்த இருசக்கர வானகம் ஒன்றில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை அடையாறு பகுதியில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி செல்வது வழமையான ஒன்று.
நடைபயிற்சி செய்யும் போது அங்கு வரும் மக்களிடம் கலந்துரையாடவும் செய்வார், நேற்று காலை நடைபயிற்சியின் போது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

அங்கு வந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனம் அதுவாகும், அவர் தனது வண்டியில் முதலமைச்சர் அமரும்படி கேட்டுக்கொள்ள, போட்டோ எடுத்துக் கொண்டார்.
Suzuki Hayabusa வாகனத்தின் விலை 18 லட்ச ரூபாய் வரை இருக்கும், மணிக்கு 299 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என்பது கூடுதல் தகவல் .
