கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு இன்று 120-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் வாழ்த்து

M K Stalin Narendra Modi
By Nandhini Jul 15, 2022 07:28 AM GMT
Report

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராஜருக்கு இன்று 120-ஆவது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்.

இந்நிலையில், காமராஜரின் 120-வது பிறந்தநாளுக்கு பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

modi - m.k.stalin

பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து

டுவிட்டர் பக்கத்தில், திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டுவிட்டர் பக்கத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.